தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வெளியிட்ட அறிக்கையில் இதனை குறிப்பிட்டார்.
அதற்கமைய, பேராசிரியர் டி. எம். எஸ். எஸ்.லக்ஷ்மன் திஸாநாயக்க புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (10) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.