புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுவரையில் 80% அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.