Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிவப்பு சீனியின் விலை அதிகரிப்பு

சிவப்பு சீனியின் விலை அதிகரிப்பு

சந்தையில் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 415 ரூபாவாக அதிகரித்துள்ளது.

வெட் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சிவப்பு சீனியின் விலை அதிகரித்துள்ளதாக சீனி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளில் இருந்து மாத்திரம் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுவதுடன், நேற்று (09) இடம்பெற்ற டெண்டர் ஒன்றின் பின்னர் ஒரு கிலோகிராம் சீனி 322 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 18% VAT மற்றும் 2.6% சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்பட்டதன் பின்னர், ஒரு கிலோகிராம் சீனியின் விலை 390 ரூபாவை தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதனுடன் தமது இலாபத்தையும் சேர்த்த பின்னர் ஒரு கிலோ சிவப்பு சீனி 415 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles