செய்திகள்உள்நாட்டுசுகாதார ஊழியர்கள் போராட்டம்: நோயாளர்கள் அசௌகரியம்

சுகாதார ஊழியர்கள் போராட்டம்: நோயாளர்கள் அசௌகரியம்

சுகாதார ஊழியர்கள் இன்று (09) ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதற்கமைய, கொழும்பு, கண்டி, களுத்துறை, அனுராதபுரம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வைத்தியர்களுக்கான விசேட கொடுப்பனவை 35,000 ரூபாவிலிருந்து 70,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு நேற்று (08) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தங்களுக்கும் அதே கொடுப்பனவை வழங்குமாறு கோரி சுகாதார ஊழியர்கள் இன்று (09) காலை 8 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles