ஒரு கோடியே 25 இலட்சத்து 37 ஆயிரத்து 808 ரூபா பெறுமதியான 221 இரத்தினக் கற்களை சட்டவிரோதமான முறையில் சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் வைத்து நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான இந்த சீனப் பெண் நேற்று காலை 09.45 மணியளவில் ஏர் ஏசியா விமானம் ஏகே-044 இல் மலேசியா ஊடாக சீனா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அவர் வைத்திருந்த சூட்கேஸில் இருந்த முத்துக்களை கண்டுபிடித்து கைது செய்தனர்.
பின்னர் மேலதிக விசாரணைக்காக சீன பெண் விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சிங்களம் அல்லது ஆங்கிலம் பேச முடியாத காரணத்தினால், சீன மொழிபெயர்ப்பாளர் ஒருவரும், இந்த சீனப் பெண்ணுக்கு மாணிக்கக் கற்கள் விற்பனை செய்த இரண்டு உள்ளூர் வர்த்தகர்களும் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலைய சுங்க வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த சீன பெண்ணை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.