நடப்பு அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஒரு மாத காலத்துக்கு மேல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களினால் அங்கு கோட்டாகோகம என்ற கிராமமும் நிறுவப்பட்டது.
இதன் கிளைகள் நாட்டின் பல்வேறு இடங்களில் தற்போது நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாரீஸ் நகரிலும் அங்குள்ள இலங்கையர்களால் கோட்டாகோகம என்ற கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.