Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கரவண்டியில் பயணித்த பிரபல நடிகையை வன்புணர்ந்த சாரதி

முச்சக்கரவண்டியில் பயணித்த பிரபல நடிகையை வன்புணர்ந்த சாரதி

பிலியந்தலை- ஜாலியகொட பிரதேசத்தில் 23 வயதுடைய பிரபல நடிகை ஒருவர் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த நடிகை மொரட்டுவ கட்டுபெத்தவிலிருந்து நுகேகொடைக்கு தனியார் பயணத்திற்காக குறித்த முச்சக்கரவண்டியை முன்பதிவு செய்துள்ளதுடன், பயணத்தை மேற்கொண்டிருக்கும்போது ஜாலியகொட பிரதேசத்தில் சாரதி வீதியோரமாக முச்சக்கரவண்டியை நிறுத்தியுள்ளார்.

முச்சக்கரவண்டியில் இயந்திரக் கோளாறை சரிபார்ப்பதாக கூறிவிட்டு இறங்கி பின் இருக்கையில் அமர்ந்திருந்த தம்மை அவர் வன்புணர்ந்ததாக குறித்த நடிகை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அப்போது, ​​நடிகை முச்சக்கரவண்டி சாரதியை தள்ளிவிட்டு வாகனத்தில் இருந்து குதித்து, சத்தம் போட்டுள்ளார். இதனால் பயமுற்ற சாரதி நடிகையை வீதியில் விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles