தபால் திணைக்களத்தின் அதிகூடிய வருமானம் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த வருமானம் 54 வீதம் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு மாகாண தபால் நிர்வாக வளாகத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தை தபால் திணைக்களம் 10 வீதமாக அதிகரிக்க வேண்டுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.