Wednesday, May 21, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை Zoom ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை

காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை Zoom ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை

காலி சிறைச்சாலையில் இன்று (08) முதல் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளை காய்ச்சலால் உயிரிழந்ததையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய கைதிகள் அனைவரும் அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் மேலும் 08 கைதிகள் மூளைக் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக்காய்ச்சல் காரணமாக கடந்த 3ஆம் திகதி உயிரிழந்துள்ளதையடுத்து சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles