அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னரிடமிருந்து திருடப்பட்ட டெஸ்ட் தொப்பி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவுஸ்திரேலிய அணியினர் தங்கியுள்ள சிட்னியில் உள்ள ஹோட்டலில் டேவிட் வோர்னரின் தொப்பி மற்றும் ஏனைய பொருட்கள் அடங்கிய பை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அது எப்படி அங்கு வந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு பயணித்த போது குறித்த பை மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது.