Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை விளையாட்டு அறையில் துப்பாக்கி - தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

பாடசாலை விளையாட்டு அறையில் துப்பாக்கி – தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

வத்தளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலை வத்தளை பொலிஸ் பிரிவிற்குள் அமைந்திருந்த போதிலும் மஹாபாகே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு, அந்த அறையில் டி-56 துப்பாக்கி, 125 தோட்டாக்கள், 4 மெகசின்கள், 18 9எம்எம் தோட்டாக்கள், பல கைத்தொலைபேசிகள் மற்றும் பொலிஸ் சீருடை என்பன காணப்பட்டன.

குறித்த ஆயுதங்கள் திட்டமிட்ட குற்றவாளியான ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்பவருடையது என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதுகுறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles