இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஹமூத் உஸ் ஜமான் கான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நேற்று (03) நடைபெற்ற நான்காவது இலங்கை-பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்தடைந்தார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவருடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.