Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட கைப்பேசிகளுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட கைப்பேசிகளுடன் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுங்க வரி செலுத்தாமல் வெளியே எடுத்துச் சென்ற 323 கைப்பேசிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (03) கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வைத்து அவர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பயணித்த வேனும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த கைப்பேசிகளில் பயன்படுத்தப்படாத 246 புதிய கைப்பேசிகளும், வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் 77 கைப்பேசிகளும் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரும், வத்தளை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு இந்தக் கைப்பேசிகளை எடுத்துச் செல்லும் போது, ​​பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று வேனை தடுத்து நிறுத்தியுள்ளது.

அதன்போது நடத்தப்ட்ட சோதனையில் கைப்பேசிகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் மற்றும் வேனுடன் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles