வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் கடத்திய தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் தனித்திருந்த போது கைதுசெய்யப்பட்டதாகவும் விசாரணையில் போதைப்பொருள் விற்பனை செய்யும் தம்பதிகள் எனத் தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரும் தாற்காலிகமாக குடியேறிய சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 980 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு கிலோ கேரள கஞ்சா, 300 போதை மாத்திரைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
சந்தேகமடைந்த பொலிஸார், யுவதியின் கைப்பேசியை சோதனையிட்டபோது, அதில் பல சிறிய ஐஸ் போதைப்பொருள் பக்கற்றுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
சந்தேகநபர்கள் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.