Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவருட இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 சதவீதமாக குறைக்கப்படும்!

வருட இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 சதவீதமாக குறைக்கப்படும்!

இந்த வருடத்தை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் மூலம் வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 சதவீதமாக குறைக்கப்படும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோர் அதிகார சபைக்கான வேலைத்திட்டம் இந்த வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் அதனால் நுகர்வோர் உரிமைகள் மேலும் பாதுகாக்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போதுள்ள வரிக் கொள்கையால், எதிர்காலத்தில் பல சலுகைகள் கிடைக்கும் என உறுதி செய்ய முடியும் எனவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்குக் கிடைக்கும் வரி வருமானத்தில் இருந்து நாட்டின் எதிர்காலத்துக்காக முதலீடுகள் செய்யப்படுமானால் அதற்குத் துணை நிற்க வேண்டியது மக்களின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 12 சதவீதம் என்ற அளவிலேயே வரி வசூலிக்கப்படுகின்றது. எனினும், நாட்டை விட்டு வெளியேறி தொழிலுக்காகச் செல்லும் நாடுகளின் வரி சதவீதம் 38 முதல் 43 அளவில் உள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

வெங்காய ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியதால் நாட்டிற்கு அதிக சுமை ஏற்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெங்காய ஏற்றுமதியை இந்தியா எளிதாக்கிய பிறகு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் எனவும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles