இலங்கை மின்சார சபையின் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது அதன் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறும் எந்தவொரு ஊழியரையும் பணி இடைநிறுத்தம் செய்யுமாறு இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (3) தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணை திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையும் அடுத்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.