எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரக் குழுவில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.
எனவே, ஜனவரி 9 ஆம் திகதி காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.