Sunday, July 20, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாதாரண சேவைகள் மட்டும் இடம்பெறுமாம்

சாதாரண சேவைகள் மட்டும் இடம்பெறுமாம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கடவுச் சீட்டு விநியோகம் சாதாரண சேவையின் கீழ் இன்று முதல் மீண்டும் வழமைப்போல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒருநாள் சேவை இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5ஆம், 6ஆம் மற்றும் இன்றைய தினங்களில் சாதாரண சேவையின் கீழ் நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களின் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்படவுள்ளன

அத்துடன், கடந்த 5ஆம் திகதி சாதாரண சேவையின் கீழ் விண்ணப்பங்களை கையளிப்பதற்காக திணைக்களத்திற்கு சென்று, இலக்கம் அல்லது திகதி முத்திரையை பெற்றுக்கொண்டவர்களின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் விண்ணப்பங்களை கையளிப்பதற்கு முற்கூட்டிய நேரத்தை ஒதுக்கி கொள்வது அவசியமாகும்.

இதற்கமைய, www.immigration.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசித்து அல்லது 070 71 01 060 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அதற்கான காலம் மற்றும் நேரத்தினை ஒதுக்கி கொள்ளுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles