ஆசிரி போர்ட் சிட்டி மருத்துவமனை தனியார் நிறுவனம் கொழும்பு துறைமுக நகரில் ஒரு மருத்துவமனையை அமைப்பதற்கான முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.
இதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வர்த்தமானியின் உத்தரவின் ஊடாக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முதன்மை வணிகமாக இந்தத் திட்டத்தை அறிவித்ததன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்படி முன்மொழிவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.