Sunday, May 25, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறையிலுள்ள கணவனுக்கு ஹெரொயின் கொண்டு சென்ற மனைவி கைது

சிறையிலுள்ள கணவனுக்கு ஹெரொயின் கொண்டு சென்ற மனைவி கைது

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை சூட்சுமமாக மறைத்து வைத்து கொண்டு சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாத்துவ – மொல்லிகொட பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான பெண், தனது கணவரிடம் கொடுப்பதற்காக ஒரு ஜோடி காற்சட்டையை எடுத்து வந்துள்ளார்.

இதனை அவதானித்த சிறை அதிகாரி ஒருவர் சந்தேகம் அடைந்து, சோதனை செய்தபோது, காற்சட்டை விளிம்பில் 440 மில்லிகிராம் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கமைய சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles