வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான கிரிக்கெட் அமைச்சர் உப குழு தனது அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளது.
புதிய விளையாட்டுச் சட்டமூலத்தின் அறிக்கை மற்றும் வரைவு விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அதேவேளை, அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, முன்னாள் கிரிக்கெட் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால குழுவொன்றை நியமித்ததை அடுத்து ஜனாதிபதி இந்த குழுவை நியமித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் ஆகியோர் உப குழுவின் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர்.