கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து கொண்டு செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன ஊழியர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று (31) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
176 மில்லியன் ரூபா பெறுமதியான 66 தங்க பிஸ்கெட்டுகளை உள்ளாடையில் மறைத்து வைத்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போதே சுங்க அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் சந்தேக நபரான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன ஊழியருக்கு 17 கோடியே அறுபது இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம் செலுத்த தவறியதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
