Thursday, June 25, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுVAT வரி அதிகரிப்பு இன்று முதல் அமுல்

VAT வரி அதிகரிப்பு இன்று முதல் அமுல்

இதுவரையில் வரி விலக்களிக்கப்பட்டுவந்த 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இன்று முதல் வெட் எனப்படும் பெறுமதி சேர் வரி அறவிடப்படவுள்ளது.

நேற்றைய தினம் வரை 138 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுவந்தது.

எவ்வாறாயினும், அரச வருமானத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய வற் திருத்தச் சட்டத்துக்கமைய, 15 வீதமாக இருந்த வெட் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மற்றும் கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உணவு பொருட்களுக்கான விலை, போக்குவரத்து, தொலைபேசி சேவை உட்பட பல சேவைகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles