2023ஆம் ஆண்டில் லங்கா உரக் கம்பனியும், கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியும் 480 மில்லியன் ரூபா நிகர இலாபத்தை ஈட்டியுள்ளன.
கொழும்பு கொமர்ஷல் நிறுவனம் 360 மில்லியன் ரூபாவையும், இலங்கை உர நிறுவனம் 120 மில்லியன் ரூபாவையும் இலாபம் ஈட்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு அரசாங்க உர நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் ஈட்டப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதற்காக 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு நிறுவனங்களிலும் பணிபுரியும் 420 ஊழியர்களுக்கும் இரண்டு மாத அடிப்படை சம்பளத்திற்கு சமமான ஊக்கத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.