Tuesday, April 29, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடிபெண்டர் வாகனம் மோதியதில் மாணவி படுகாயம்

டிபெண்டர் வாகனம் மோதியதில் மாணவி படுகாயம்

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியினை கடக்க முற்பட்ட மாணவி மீது டிபெண்டர் வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (28) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரந்தன் வீதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற டிபெண்டர் வாகனம் வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது மோதியதில் மாணவியொருவர் படுகாயமடைந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி வள்ளிபுனம் பகுதியை சேர்ந்தவர் இவர் காலில் உடைவு ஏற்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தினை ஏற்படுத்திய களுத்துறையை சேர்ந்த 54 வயதுடைய வாகனத்தின் சாரதி புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்பட இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தில் வந்தவர்கள் இபோச பேருந்தினை மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தர்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles