Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உலகம்காசாவில் யுத்தத்தின் நடுவே ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்

காசாவில் யுத்தத்தின் நடுவே ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்

காசா பகுதியில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக காசா பகுதியின் தெற்கே னெச்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

28 வயதான இஸ்மான் அல்-மஸ்ரே என்ற இந்த பெண் காசா பகுதியின் வடக்கு பகுதியில் வசிப்பவர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜபாலியா 5 கிலோமீட்டர் தூரம் நடந்தே அகதிகள் முகாமுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இவர் நேற்று (28) இரண்டு பெண் குழந்தைகளையும் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.

அவர் தனது இரண்டு மகள்களுக்கு தியா, லின் என்றும், தனது இரண்டு மகன்களுக்கு யாசர் மற்றும் முகமது என்றும் பெயரிட்டுள்ளார்.

குறைந்த வசதிகள் உள்ள பள்ளிக் கட்டிடத்தில் இயங்கும் மருத்துவ மையத்தில் அவர் பிரசவித்துள்ளார்.

மேலும் பிரசவத்திற்குப் பிறகு புதிதாகப் பிறந்த குழந்தைகளுடன் மருத்துவமனையை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை ஒரு கிலோகிராம் (2.2 பவுண்டுகள்) மட்டுமே எடையுள்ளதாக இருந்ததாகவும், அதனால் அகதிகள் முகாமில் அதனை மருத்துவமனையில் கைவிட நேர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles