குழந்தைகள் மத்தியில் கொவிட் தொற்றும் பரவும் அபாயம் உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாத்து கொள்ளுமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த சில நாட்களில் இரண்டு குழந்தைகள் கொவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சளி போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள் இருந்தால், முகமூடி அணிவது போன்ற சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என அவர் கூறினார்.
சமீப நாட்களாக குழந்தைகளுக்கு மேல் சுவாசக்குழாய் சம்பந்தமான பல நோய்கள் பரவி வருவதாகவும் வைரஸ் நோய்களே பிரதானமாக உள்ளதாகவும் தெரிவித்த அவர், டெங்கு மற்றும் சிறுவயதில் காசநோயினால் பாதிக்கப்படும் பிள்ளைகள் பொதுவாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.