கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரித் திட்டத்தினூடாக இதுவரை 5 ஆயிரத்து 196 கோடியே 70 இலட்சம் ரூபா, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், அஸ்வெசும நலத்திட்ட உதவித் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் எதிர்வரும் மாசி மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பமாகும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, அஸ்வெசும நன்மைகள் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக 2500 ரூபா வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.