பலாங்கொடை கல்தொட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூரகல பிரதேசத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கொலை முயற்சி செய்தமைக்காக இருவர் கல்தொட்ட பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
திங்களன்று (25) இரவு குறித்த பெண் நீர் எடுக்க சென்ற போது, சந்தேக நபர்களால் பெண்னை பலவந்தமாக இழுத்து சென்று ஆற்றங்கரை ஓரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆற்றங்கரை பகுதியில் இன்று இரண்டு மணி வரை நீராடுவது உட்பிரவேசிப்பதும் தடை செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி குற்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் கல்தொட்ட பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.


