15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக டுபாய்க்கு கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 490 கிராம் எடையுள்ள மூன்று தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.