இங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாட்டின் கிராமப்புறங்களில் இந்த நிலை அதிகரித்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளமையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் வாழ்க்கைச் செலவும் சமீப காலமாக வேகமாக அதிகரித்து வருகிறது.