Thursday, November 27, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகார் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி

கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி

புத்தளம் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதியதலி; முந்திச் செல்ல முற்பட்ட கார் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதூண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற கார், மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் கார் மோதூண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து புத்தளம் -அனுராதபுரம் பிரதான வீதியின் சிறாம்பையடி இரண்டாம் கட்டைப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் காரில் பயனித்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர்த் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காரின் சாரதி குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் தப்போவ மஹாகோன்வெவ பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles