13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் 17 வயது இளைஞன் நேற்று (20) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர் வனாத்தவில்லுவ கரடிப்புவல் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் 2021ஆம் ஆண்டு சிறுமியின் சகோதரரின் மனைவி வீட்டில் வைத்து சிறுமியை வன்புணர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுமியிடம் இருந்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாத்காரத்திற்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் இன்று (21) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.