நாட்டில் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் விலை சுமார் ஒரு இலட்சம் ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதுவரை வாகனங்களுக்கு அறவிடப்படாத வெட் வரி திருத்தத்தின் மூலம் அந்த வரி மோட்டார் சைக்கிள்களிலிருந்தும் அறவிடப்படவுள்ளமையால் அவற்றின் விலை அதிகரிக்கவுள்ளது.
18மூ வரியுடன் இலங்கையின் விலை குறைந்த மோட்டார் சைக்கிளின் விலை சுமார் 7 இலட்சம் ரூபாவாக பதிவாகும் என மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.