எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் ஜனவரி 1ஆம் திகதி முதல் கடுமையான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
விசேட வைத்தியர்கள் உட்பட 1,700 இற்கும் அதிகமான வைத்தியர்களை நாடு இழந்துள்ளதுடன், 5,000 இற்கும் அதிகமான வைத்தியர்கள் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து விரைவில் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.