செய்திகள்உள்நாட்டுகீரி சம்பா அரிசிக்கு பதிலாக ஜிஆர் 11 ரக அரிசி

கீரி சம்பா அரிசிக்கு பதிலாக ஜிஆர் 11 ரக அரிசி

கீரி சம்பா அரிசிக்கு பதிலாக 50,000 மெற்றிக் டன் ஜிஆர் 11 அரிசியை தனியார் துறையினரால் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்த உணவுக் கொள்கைக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 20.11.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. உள்ளுர் சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசியின் விலையை போட்டியாக வைத்து நுகர்வோருக்கு விலை அனுகூலத்தை வழங்கும் நோக்கில் இந்த அரிசியை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles