Tuesday, April 22, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 பிரதேசங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை நிறுவ அனுமதி

3 பிரதேசங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை நிறுவ அனுமதி

நாட்டின் மூன்று பிரதேசங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை நிறுவுவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் வெளிநாட்டு வேலை விண்ணப்பதாரர்களுக்கு இலக்கு நாட்டை இலக்காகக் கொண்டு குறிப்பிட்ட பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

தற்போது நாடளாவிய ரீதியில் வாடகைக்கு விடப்பட்டுள்ள கட்டிடங்களில் குறைந்தபட்ச வசதிகளின் கீழ் இந்தப் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

எனவே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ் யாழ்ப்பாணம், ஹோமாகம மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் பயிற்சி நிலையங்களை நிறுவ அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles