2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் இன்று டுபாயில் நடைபெறவுள்ளது.
17வது இந்தியன் பிரிமியர் லீக் தொடர், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி முதல் மே மாதம் 29 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
குறித்த தொடரில், பங்கேற்கும் 10 அணிகளுக்காக 77 வீரர்கள் ஏலத்தின் ஊடாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.
ஏலப்பட்டியலில், 214 இந்திய வீரர்களும், 119 வெளிநாட்டு வீரர்களும் அடங்கலாக 333 வீரர்கள் இடம்பிடித்துள்ளதாக இந்தியன் பிரிமியர் லீக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இம் முறை இடம்பெறும் ஏலத்தில் இலங்கையின் 8 வீரர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.