சிறைச்சாலை பேருந்துகளில் சிசிடிவி கமராக்களை பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறைக் கைதிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் சிறைச்சாலைகளின் பேருந்துகளில் கமராக்களை பொருத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பிற்கு கமராக்கள் பொருத்தப்படுவது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், அவற்றை கண்காணிப்பதால், சிறைச்சாலை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவதற்கான வாய்ப்புகள் குறைவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பேருந்து ஒன்றில் 7 கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், அதில் அனைத்து காட்சிகளும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.