மெக்சிகோவில் விருந்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 12 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மெக்சிகோவின் சல்வடோர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிஸ்மஸ் விருந்தின் போது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
விருந்தில் பங்குபற்றிய 06 பேர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.