எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்ட 39,815 வீடுகளின் பணிகளை விரைந்து நிறைவு செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கு 24,000 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 2இ158 கிராமங்களில் 42,610 வீட்டுத் தொகுதிகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அத்துடன், அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள 98இ000 வீடுகளை விரைவாக நிர்மாணிப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.