Friday, January 17, 2025
25.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டு15 வயது சிறுமியை கடத்திய நபர் கைது

15 வயது சிறுமியை கடத்திய நபர் கைது

15 வயதுடைய மாணவி ஒருவரை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவரை பொல்கஹவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யட்டிகல்ஒலுவ, பொரமடல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

10ஆம் தரத்தில் கல்வி கற்கும் தனது மகள் கடந்த 16ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் காணாமல் போயுள்ளதக சிறுமியின் தாயார் நேற்று (17) பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமி ஒரு இளைஞனுடன் தொடர்பு வைத்திருந்ததாக சிறுமியின் தாய் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொல்கஹவெல பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் சந்தேக நபரான காதலனை நேற்று (17) மாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

காணாமல் போனதாக கூறப்படும் பாடசாலை மாணவியும் சந்தேகநபரின் வீட்டில் இருந்த போது பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவி மருத்துவ பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,சந்தேகத்திற்குரிய காதலனை இன்று (18) பொல்கஹவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles