மாத்தறை – பள்ளிமுல்ல பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் முச்சக்கரவண்டி மற்றும் கார் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சுமார் 5 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.