Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து சாரதி ஒருவர் படுகொலை

பேருந்து சாரதி ஒருவர் படுகொலை

ஹங்வெல்ல – தும்மோதர சந்திக்கு அருகில் இன்று (15) காலை பேருந்து சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் ஆடை தொழிற்சாலை ஒன்றின் பேருந்து சாரதி என ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

கடவுளுக்கு பூஜை செய்வதற்காக பூ பறிக்கும் போதே குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலையை செய்த சந்தேக நபர் கொழும்பு நோக்கி செல்லும் ரயிலில் ஏறி தப்பிச் செல்ல முயன்ற போது மீகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹங்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles