Friday, October 10, 2025
25 C
Colombo
செய்திகள்விளையாட்டு19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்பினர்

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்பினர்

டுபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி நேற்று (14) நாடு திரும்பியது.

27 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று (14) இரவு 10.50 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK-648 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணிஇ ஆரம்பச் சுற்றில் போட்டியிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இலங்கை அணி தோல்வியடைந்ததால் இவ்வாறு வெளியேறியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles