Sunday, August 10, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆண்களில் 10 வீதமானோர் குடும்ப வன்முறையால் பாதிப்பு

ஆண்களில் 10 வீதமானோர் குடும்ப வன்முறையால் பாதிப்பு

இலங்கையில் உள்ள 10% ஆண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் சுகாதார பிரிவின் திட்ட முகாமையாளர் சமூக வைத்திய நிபுணர் நெத்யாஞ்சலி மாபிடிகம தெரிவித்துள்ளார்.

இதற்கு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாவனையே பிரதான காரணமாக அமைந்துள்ளதாக களுபோவில பொது வைத்தியசாலையின் ‘மிதுரு பியச’ பொறுப்பதிகாரி வைத்தியர் ஹேஷானி கருணாதிலக்க தெரிவித்தார்.

குடும்ப வன்கொடுமை குறித்து தெரிவிக்கும் வகையில் இயங்கும் ‘மிது பியச’ பிரிவு மூலம் 24 மணி நேரமும் இயங்கும் புதிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்த குடும்ப சுகாதார பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, குடும்ப வன்முறை தொடர்பில் 0702611111 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நாளின் எந்த நேரத்திலும் தெரிவிக்க முடியும் என பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles