Saturday, January 17, 2026
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத வன்முறைகளை ஏற்படுத்தும் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை

மத வன்முறைகளை ஏற்படுத்தும் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை

மத ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறித்த குற்றங்களை விசாரிப்பதற்காக பிரத்தியேகமான குழுவொன்றை உருவாக்குமாறு பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை பதிவிடுவோருக்கு எதிராக முறைபாடுகள் அளிப்பதற்கு விசேட தொலைப்பேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

0112300637, என்ற தொலைப்பேசி இலக்கத்தினூடாகவும் 0112381045 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் முறைபாடு அளிக்கமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[email protected] என்ற மின்னஞ்சல் வழியாகவும் முறைபாடுகளை அளிக்க முடியும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles