கொழும்பு 07 – கிரெகரி மாவத்தையில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.
இன்று (14) காலை 10 மணியளவில் இந்த பெரிய மரம் முறிந்து விழுந்துள்ளதுடன், இதனால் மின் அமைப்பில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் அருகில் இருந்த வீட்டிலும் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அங்கு போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.