Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உலகம்இந்திய பாராளுமன்றத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு

இந்திய பாராளுமன்றத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு

இந்திய பாராளுமன்ற கூட்டத்தின் போது, பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்களினால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று பிற்பகல் மக்களவையில் பார்வையாளர் இடத்தில் இருந்து இருவர் திடீரென எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் குதித்தனர்.

அதில் ஒருவர் சபாநாயகர் நோக்கி ஓடியதுடன், மற்றைய நபர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்.

இதனால் எம்.பி.க்கள் பதற்றம் அடைந்து ஓட ஆரம்பித்தனர்.

பின்னர் பாதுகாவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து சந்தேக நபர்களை மடக்கி பிடித்தனர்.

அதேவேளையில் பாராளுமன்றத்திற்கு வெளியே ஆணொருவரும், பெண்ணொருவரும் புகை குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் பதற்றமான நிலை ஏற்பட்டது.

அவர்களையும் கைது செய்த டெல்லி பொலிஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

2001 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத் தாக்குதலின் ஆண்டு நினைவு நாளான இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles