Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிமானத்தில் இலங்கை சிறுமியை சீண்டிய இந்திய பிரஜை

விமானத்தில் இலங்கை சிறுமியை சீண்டிய இந்திய பிரஜை

சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த இலங்கை விமானத்தில் பயணித்த இலங்கை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்திய பிரஜை ஒருவர் விமான ஊழியர்களால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 07.20 மணியளவில் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-266ல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் 49 வயதான இந்திய பிரஜை ஆவார்.

குறித்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், வேறு ஒரு விமானத்தில் இந்தியா திரும்ப வந்தவர் என்று கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது சகோதரி மற்றும் தாயும் சவூதி அரேபியாவில் பணிபுரியும் தனது தந்தையைப் பார்க்கச் சென்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் 08 வயதுடைய சிறுமி இந்த இந்தியப் பிரஜையினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சிறுமியின் தாயார் இது தொடர்பில் விமான ஊழியர்களிடம் முறைப்பாடு செய்துள்ளார்;.

இதன்படி, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதையடுத்து, குறித்த இந்திய பிரஜையை கைது செய்து விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்க விமான ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போது, ​​பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான இலங்கைச் சிறுமியு மருத்துவப் பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இந்திய பிரஜை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles